அண்மையில் பார்த்திபன் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் இரவின் நிழல். இந்த படம் தமிழில் முதல் சிங்கிள் ஷாட் நான்லினியர் படமாக வெளிவந்துள்ளதால் படம் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வந்தது.
இந்த படத்தில் பார்த்திபன் உடன் இணைந்து பிரகிடா, ரேகா நாயர், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத் போன்ற பல நடிகர் நடிகைகளும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். அதனால் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் குறைவான பட்ஜெட்டில் உருவான இரவின் நிழல் திரைப்படம்.
போட்ட பட்ஜெட்டை தாண்டி பல மடங்கு வசூல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒரு பக்கம் பாராட்டுகளை பெற்று வந்தாலும் மறுபக்கம் படத்தில் அமைந்த சில காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் பிரிகிடா நடித்த கதாபாத்திரத்தில் ஒரு காட்சியில் அரை நிர்**மாக நடித்திருந்தார்.
அது குறித்து சில பேட்டிகளில் பிரிகிடாவிடம் கேட்டதற்கு நான் முதலில் அந்த காட்சியில் நடிக்க பயந்தேன் பின்பு இயக்குனர் பார்த்திபன் சார் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதாலே நடித்தேன் என்று கூறியிருந்தார். தற்போது பிரிகிடா நினைப்பது இந்த காட்சியில் நடித்ததால் தனக்கு இருந்த இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது போல் நினைக்கிறார்.
மேலும் இரவினில் படத்தில் அரை நிர்**மாக நடித்ததால் என் வாழ்க்கையே வீணா போச்சு என பார்த்திபனிடம் கூறி கதறி அழுதுள்ளாராம் பிரகிடா. அதற்கு பார்த்திபன் அந்த கதையின் முக்கியத்துவத்தை கூறி ஆறுதல் கூறியுள்ளார். பிரிகிடா நடிச்ச கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தற்போது பல இயக்குனர்களும் அவரை தேடி வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர் என கூறி பிரிகிடாவை சமாதானம் செய்துள்ளார்.