பொதுவாக சீரியலுக்கு பெயர்போன தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான் அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்களிலும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இருப்பது மட்டுமல்லாமல் அவை டிஆர்பியில் முன்னிலை வகிக்க உதவியாக இருந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இவ்வாறு இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள். அந்தவகையில் மாப்பிள்ளை, ராஜா ராணி, நம்ம வீட்டு பொண்ணு, மகராசி, கோகுலத்தில் சீதை ஆகிய செயல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் வைஷாலி தனிகா.
இவர் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணனின் காதலியாக வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகியதன் காரணமாக அவருக்கு பதிலாக தீபிகா என்ற மற்றொரு நடிகை நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவரை காட்டிலும் நமது வைஷாலி தான் பெருமளவு ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடிய வைஷாலி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது மட்டுமில்லாமல். இதுதான் தன்னுடைய கடைசி பேச்சிலர் பிறந்தநாள் என ஒரு கேப்ஷன் ஐயும் வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் தன்னுடைய அடுத்த பிறந்தநாள் ஆனது திருமதி சத்யதேவ் ஆக மாறிவிடும் என்று கூறியது மட்டுமல்லாமல் விரைவில் என்னுடைய திருமண தேதியையும் சமூகவலைத்தள பக்கத்தில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய வருங்கால கணவருடன் இணைந்து கொண்டு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய வைஷாலியின் புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் நீங்கள் திருமணம் செய்து கொண்டாலும் மீண்டும் திரையில் நடிக்க வேண்டுமென அவருடைய ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
ஏனெனில் நடிகைகள் பெரும்பாலும் திருமணம் செய்து கொண்டாலே சினிமாவிற்கு முழுக்கு போடுவது வழக்கம் தான் இந்நிலையில் உங்கள் வாழ்க்கையிலும் இது நடக்கக் கூடாது என அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.