நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் விஜய், அஜித், தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் செய்து கொண்டதும் ஹனிமூனுக்கு மாலத்தீவு சென்றுள்ளார்கள் அங்கு விதவிதமான புகைப்படங்களை எடுத்து ரசிகர்களுக்கு வெளியிட்டு வந்தார்கள். இந்த நிலையில் தனது கணவர் பற்றி முதன் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது கௌதம் என்னிடம் ப்ரொபோஸ் செய்வதற்கு முன்பு என் தந்தையிடம் அனுமதி பெற்று விட்டார். அவர் கண்டிப்பாக ப்ரொபோஸ் செய்வார் என்று தெரியும் அதனால் அவர் ப்ரொபோஸ் செய்த பொழுது ஆச்சரியமாக இல்லை என் தந்தையிடம் முன்பே பேசினாலும் ப்ரொபோஸ் செய்யாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன்.
எங்கள் இருவரில் கௌதம் தான் ரொம்பவும் ரொமான்டிக் கௌதம் அவர்களுக்கு முதல் காதலி என்றால் அது செல்போன் தான், தற்பொழுது வேற புது போன் கிடைத்திருக்கிறது அந்த காதலை கைவிட்டால் நன்றாக இருக்கும், எங்களுக்குள் சண்டை வந்தால் கௌதம் தான் முதலில் விட்டுக் கொடுப்பார் திருமணம் முடிந்த கையோடு புது வீட்டில் குடித்தனம் சென்றது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.
கௌதம் என் மீது அதிக அக்கறை வைத்துள்ளார் அவர் சரியான நேரத்திற்கு சாப்பிட்டாரா தூங்கி நாரா என நான் பார்த்துக்கொள்கிறேன் அதேபோல் நான் எங்காவது சென்று பத்திரமாக சென்று எனது நாள் எப்படி இருந்தது என கௌதம் கேட்பார்.
திருமணத்திற்கு முன்பு இப்படி எல்லாம் இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.