தமிழ் சினிமா உலகில் பெரும்பாலும் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு யாரும் துணை கதாபாத்திரங்களில் அல்லது ஹீரோவுக்கு தங்கையாக நடிப்பதை விரும்ப மாட்டார்கள் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்று இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனக்கு கிடைக்கும் கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தால் போதும் எந்த எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்துவருகிறார்.
அது அவருக்கு வெற்றியையும் பெற்றுத் தருகிறது. அண்மையில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறிய நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுழல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்தப் படத்தில் அவருடன் இணைந்து இராதாகிருஷ்ணன், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி என பலர் நடித்து அசத்தியுள்ளனர் .
இந்த படம் திரையரங்கில் வராமல் மாறுதலாக OTT தளத்தில் வெளியாக இருக்கிறது. சுழல் திரைப்படத்தின் கதையை புஷ்பக மற்றும் காயத்திரி எழுதி உள்ளனர். இந்த படம் OTT தளத்தில் வெளியானாலும் 30 மொழிகளில் வெளியாக இருக்கிறது ஜூன் 17 படமும் ரிலீசாகிறது.
இப்படம் திரில்லர் ஜானரில் தயாராகி உள்ளது இந்த படம் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் எனப்படுகிறது இதனையடுத்து இந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில் பாகுபலி, RRR, போன்ற படங்கள் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்ததை பார்த்து உள்ளோம் இந்த சுழல் திரைப்படமும் அதையெல்லாம் மிஞ்சும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
அது போன்ற திரைப்படங்களை பார்த்த பொழுது நானும் படத்தோடு ஒன்றி கொண்டு அதுபோல ஒரு படத்தில் நடிக்க மாட்டோமா என ஏங்கி இருக்கிறேன் சுழல் வார்டோக்ஸ் போன்ற ஒரு பிரமாண்ட படைப்பில் ஒரு அங்கமாக பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.