தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக பார்க்கப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இதுவரை அதிக ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி அண்மை காலமாக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடுகிறார் அந்த வகையில் இப்பொழுது தனது 169 திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது. இதனால் அந்தப் படத்தில் ஆக்சன், செண்டிமெண்ட் போன்றவை அதிகம் இருக்கும் என தெரிய வருகிறது. ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், சிவராஜ் குமார் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவும் ரஜினி திட்டம் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியின் தன்னுடைய சினிமா கேரியரில் பிளாப் படங்களில் இருக்கக் கூடாது என முடிவு எடுத்து உள்ளார். அந்த வகையில் அவருடைய கேரியரில் மிகப்பெரிய ஒரு ஃபிளாக் படமாக மாறியது பாபா.
2002 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் படம் வெளிவந்து இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மணிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர் பாபா படம் படு தோல்வி அடைந்தது. இதனால் ரஜினியின் மார்க்கெட் அப்பொழுது பெரிய அளவில் சரிவை சந்தித்தது. உடனே சுதாரித்துக் கொண்டு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார் இருப்பினும் பாபா படம் ஒரு ஃபெயிலியர் படம் என இப்பொழுதும் பேசப்பட்டு வருகிறது.
இதை மாற்றி அமைக்க தற்பொழுது ஒரு புதிய பிளானை போட்டு இருக்கிறார் ரஜினி அதாவது பாபா படத்தை ரசிகர்கள் விரும்பும் படி மறு திருத்தம் செய்து புதிய தோற்றத்துடன் டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உள்ளனர் விரைவில் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது. இது பற்றிய அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாபா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இருவரும் 20 வருடங்களுக்குப் பிறகு சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.