சினிமா உலகில் நடித்தாலும் சரி, நடிக்காவிட்டாலும் சரி ரசிகர்களை அதிகளவு கவர்ந்து இழுத்து கனவு கன்னியாக வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். மாடலிங் துறையில் இருந்து இவர் சினிமா பக்கம் வந்தவர். எந்த ரோல் கொடுத்தாலும் கன கச்சிதமாக நடித்து அசத்துகிறார்.
குறிப்பாக கவர்ச்சி கதாபாத்திரங்களில் பின்னி பெடல் எடுப்பது இவருக்கு கைவந்த கலையாக இருக்கிறது மலையாளத்தில் ஓரிரு திரைப்படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தமிழில் எடுத்த உடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
அதன்பின் விஜயுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் என அடுத்தடுத்த சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து அசத்தினார் தற்போது தமிழில் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்தியில் ஓரிரு பட வாய்ப்பை கைப்பற்றியுள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் அப்பொழுது ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுக்கும்.
வகையில் புகைப்படங்களை அள்ளிவீசி அசத்தி வருகிறார் மேலும் ரசிகர்களுடன் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் உரையாடுகிறார்.ரசிகர்களும் விடாமல் மாளவிகா மோகன்னிடம் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டு வருகின்றனர் அவரும் சலிக்காமல் தொடர்ந்து பதில் கூறி வருகிறார்.
அப்படி ஒரு ரசிகர் ஒருவர் அண்மையில் விஜய் பற்றி கூறுங்கள் என கேட்டுள்ளார் அதற்கு மாளவிகா மோகனன் விஜயை எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் யார் படத்தில் நடித்தாலும் சரி விஜய் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் விஜய் தான் என நடிகை மாளவிகா மோகனன் கூறினார்.