பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்தவகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றவர்தான் ஆரவ்.
இவ்வாறு இந்த பிரபலத்தை பயன்படுத்தி நமது நடிகர் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது மட்டும் இல்லாமல் இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்பும் கிடைக்க வழி வகுத்துக் கொடுத்தது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அருகில் வா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்நிலையில் நமது நடிகர் தன்னுடைய நீண்ட நாள் தோழியான ரஹீ என்பவரை சமீபத்தில்தான் திருமணம் செய்துகொண்டார் இவ்வாறு இருவருடைய திருமணத்திற்கு பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் வந்திருந்தார்கள்.
இந்நிலையில் நமது நடிகர் தற்போது தந்தையாகும் செய்தியானது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகிய நிலையில் மனைவிக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். இந்நிலையில் நமது நடிகருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் தன்னுடைய குழந்தையின் விரல்களைப் பிடித்துக் கொண்டு தன்னுடைய மனைவியும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள் என்று கூறியது மட்டுமில்லாமல் 11 மாதங்களுக்கு பிறகாக என் அப்பா மீண்டும் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார் என கூறி தன்னுடைய சந்தோஷத்தை கொண்டாடியுள்ளார்.