என்னுடைய ரசிகர்கள் 3 வருஷமா.. ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் – வருத்தத்துடன் சொன்ன நடிகர் விக்ரம்.!

vikram-
vikram-

சினிமா இருக்கும் நடிகர்கள் பலரும் சமீபகாலமாக மெனக்கட்டு நடிப்பதில்லை சாதாரணமாக காதல், சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் என தலைகாட்டி விட்டு ஓடுகின்றனர் ஆனால் ஒரு சிலரோ படத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது உடல் எடையை அதிகரித்துக் கொள்வது குறைத்துக் கொள்வது.

கொடுக்கப்பட்ட ரோலில் சிறப்பாக நடிப்பவர்கள் ஒரு சிலரே அவர்களில் ஒருவர் நடிகர் விக்ரம். சினிமா உலகில் என்னதான் இவர் சிறந்த படங்களை கொடுத்தாலும் சமீபகாலமாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றியை ருசிக்காமல் இருக்கின்றன 2019ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான துருவநட்சத்திரம் திரைப்படமும் தோல்வியை தழுவியது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அந்த படங்கள் வெளிவரவில்லை இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடித்த மஹான் திரைப்படம். OTT தளத்தில் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது. மூன்று வருடங்கள் இவரது திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் இருப்பது அவரது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் பேட்டி ஒன்றில் பேசிய என் ரசிகர்கள் ரொம்ப பாவம் சில வருடங்களாக என் படங்கள் திரையரங்கில் வெளியாகவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார். இப்போது இவரும் அவரது மகன் துருவ் விக்ரம் நடித்த மஹான் திரைப்படமும் OTT தளத்தில் வெளியாகி அது அவரது ரசிகர்களை இன்னும் வருத்தமடைய செய்துள்ளது.

இவர் நடிப்பில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்து அசத்தும் பட்சத்தில் அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என விக்ரமும்  உள்ளார் ரசிகர்களும் அதை பெரிதளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.