சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீரா மிதுன் இவர் தன்னை தானே மாடல் என்று சொல்லிக்கொண்டு திரிந்து வருகிறார். அந்தவகையில் மீரா மிதுன் திரைப்படங்களில் ஒரு சில படத்தில் மட்டுமே சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவார் என்று நினைத்த நிலையில் வெறுப்புகளை மட்டுமே சம்பாதித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் சக போட்டியாளர்கள் கூட இவரை அவமதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு மீராமிதுன் தொடர்ந்து மக்களைப் பற்றியும் பிரபலங்களை பற்றியும் குறை சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார் அந்த வகையில் இவருடைய நடிப்பில் பேய காணும் என்ற திரைப்படம் உருவாகி வந்தன.
இந்நிலையில் சமீபத்தில் மீரா மிதுன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் அவர் தன்னை பற்றி இன்னும் பலர் தவறாக பேசி வருவதன் காரணமாக அதற்கு விளக்கம் கொடுக்க தான் இப்படி ஒரு வீடியோவை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.
அந்தவகையில் அவர் கூறியது என்னவென்றால் இந்த உலகத்தில் ஏகப்பட்ட கிரிமினல்கள் இருக்கிறார்கள் ஆனால் அதில் என்னுடைய பெயரை பலர் புகழுக்காக பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு அவை நீடித்தால் கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சில வருடங்களாகவே எனக்கு முதலமைச்சராக ஆக வேண்டும் என்பதுதான் ஆசை ஆகையால் நான் தேர்தல் பிரச்சாரங்களில் கூட கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன் ஆனால் அவை நிறைவேற கூடாது என பலர் என்னுடைய முயற்சியை தடுக்க நினைக்கிறார்கள். இது சுற்றியிருக்கும் மக்களுக்கும் நன்றாக தெரியும் என மீராமிதுன் கூறி உள்ளார்.