இந்த இயக்குனர் படத்தில் நடிப்பது தான் என்னுடைய ஆசையே..! நடிகர் அருண் விஜய்யின் வெளிப்படை பேச்சு..!

arun-vijay
arun-vijay

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து இருந்தாலும் அதன் பிறகு வாய்ப்பு இன்றி தவித்து வந்த ஒரு நடிகர்தான் அருண்விஜய்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த திரைப்படம் என்னவென்றால் என்னை அறிந்தால் திரைப்படம் தான்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிக்காட்டிய அருண் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் பல்வேறு ரசிகர்களாலும் அறியப்பட்டது மட்டுமில்லாமல் அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

இந்நிலையில் நமது நடிகர் சமீபத்தில் ஹரி இயக்கத்தில் யானை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்தவகையில் இந்த திரைப்படமானது ஜூலை மாதம் மூன்றாம் தேதி திரைக்கு வர உள்ளது இந்நிலையில் இந்த திரைப் படத்திற்கான பிரமோஷன் பணியில் படக்குழுவினர் மிகத்தீவிரமாக உள்ளார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அருண் விஜய் அவர்கள் ராஜ்குமார், சஞ்சய் லீலா பன்சாலி, ரோகித் ஷெட்டி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் அவர்களுடைய அனைத்து திரைப்படங்களையும் நான் பார்த்துள்ளேன் அது மட்டும் இல்லாமல் அவர்களுடன் கூட்டணி வைத்தால்  இந்தியா ஆடியன்ஸ்களை நான் பெருமளவு கவரமுடியும் என்று நினைப்பதை காட்டிலும் படமும் மெகா ஹிட் அடிக்கும்.

இவ்வாறு நடிகர் அருண் விஜய் அவர்கள் பேட்டியில் பேசிய இந்த தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி வருகிறது.