என்னுடைய சினிமா பயணம் முடிவதற்குள் – ரஜினி, கமலை வைத்து படம் பண்ண வேண்டும்.! துடிக்கும் பிரபல இயக்குனர்.?

rajini and kamal
rajini and kamal

தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து பிரமாண்ட பட்ஜெட் படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருபவர் எஸ்எஸ் ராஜமௌலி. பாகுபலி என்ற திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் எடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

பாகுபலி படம் எதிர்பார்க்காத அளவிற்கு 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி அதனை தொடர்ந்து அதன் அடுத்த பாகத்தையும் எடுத்து அசத்தினார்.  இந்த படம் சுமார் ஆயிரம்கோடி கிட்டத்தட்ட வசூல் வேட்டை நடத்தி இப்படி பாகுபலி சிரிஸ் மட்டுமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான கதைகளை..

மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்க முனைப்பு காட்டினார் அந்த வகையில் ராம்சரண் ஜூனியர் என்டிஆரை வைத்து எஸ்எஸ் ராஜமவுலி எடுத்த திரைப்படம் தான் RRR. இந்தப் படத்தையும் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க எடுத்துள்ளார் இந்த திரைப்படம் நேற்று கோலாகலமாக திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.

இந்த படத்தின் பிரமோஷன் விழா போன்றவற்றில் கலந்துகொண்ட ராஜமௌலி அப்போது பேசிய ராஜமௌலி தமிழ் சினிமா முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க ஆசையாக இருக்கிறது அதுவும் ரஜினி கமல் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கும் ஆசை ரஜினியை ஹீரோவாகவும் கமலை வில்லனாக வைத்தும் ஒரு படத்தை எடுத்து விட்டால் எனது கனவு ஆசை நிறைவேறி விடும் என பேசி உள்ளார்.

ராஜமௌலி சும்மாவே பிரமாண்ட பட்ஜெட்டில் சிறப்பான படத்தை எடுப்பார் ரஜினி கமல் அவர்களது படத்தில் இணையும் பட்சத்தில் அந்த படம் வரலாறு காணாத ஒரு படமாக எடுப்பார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ராஜமௌலியின் ஆசை நிறைவேறும் என பலரும் கூறி வருகின்றனர்.