விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம் இந்த பொங்கலை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி கோலாகலமாக உலகம் முழுவதும் ரிலீசானது படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்சை வெகுவாக கவர்ந்துள்ளது.
அதனால் இந்த திரைப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் அதிகம் அள்ளி வருகிறது இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது விஜயின் வாரிசு திரைப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஜெயசுதா போன்றவர்களுக்கு முக்கியமான கதாபாத்திரங்கள்
அதேநேரம் படத்தில் அதிக நேரம் வந்து போவார்கள் ஆனால் ஒரு சில கதாபாத்திரங்கள் மொக்கையாக இருந்தது அதே நேரம் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி விட்டுப் போனார்கள் அந்த வகையில் குஷ்பூ இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது ஆனால் படத்தில் பார்த்தால் அப்படி தெரியவே இல்லை.
ஸ்ரீமன், விடிவி கணேஷ் போன்றவர்கள் இந்த படத்தில் நடித்தது வேஸ்ட் தான் என கூறப்படுகிறது. இவர்களோடு முடிந்துவிட்டது என்று பார்த்தால் இல்லை.. வாரிசு திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடித்ததும் ஒரு மொக்கை கதாபாத்திரம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில்..
வாரிசு திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மொக்கை என்பது எனக்கே தெரியும் இருப்பினும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள காரணம் விஜய் போன்ற சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம் என்று நினைத்து தான் இதில் நடித்தேன் என கூறினார்.