தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் உலக நாயகன் கமலஹாசனின் மகள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் விஜய், சூர்யா, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி என பல்வேறு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக அவதாரம் எடுத்து விட்டார்.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் தமிழ் சினிமாவில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் தான் லாபம். ஆனால் இத்திரைப்படம் சொல்லும்படி வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை ஏனெனில் நமது நடிகை தெலுங்கு திரை உலகில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
மேலும் நமது நடிகை சமீபத்தில் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலன் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் அந்தவகையில் அவர் தான் ஒரு சினிமா நடிகை என்பது இதன் காரணமாக பல்வேறு விஷயங்களை நான் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடாமல் மறைத்து விட்டேன்.
என்று கூறியது மட்டுமில்லாமல் சில வருடங்களுக்கு முன்பாக நான் சிங்கிளாக தான் இருந்தேன் ஆனால் தற்போது சாந்தனு ஹசாரிகா வை நான் காதலித்து வருகிறேன் அந்தவகையில் என்னுடைய எண்ணமும் அவருடைய எண்ணமும் ஒத்துப்போக எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
அவர் எனக்கு முதன் முதலாக என்னுடைய தோழிக்கு பெயிண்டிங் பரிசளித்த பொழுது தான் அறிமுகமானார் அதன் பிறகு நான் அவரிடம் இணையத்தில் பேச ஆரம்பித்தேன் பின்னர் அதுவே எங்களுக்குள் காதலை உருவாக்கியது மட்டுமில்லாமல் நாங்கள் தற்காலத்தில் திருமணம் செய்து கொள்வோமா மாட்டோமா என்பது எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.