என்னுடைய சிறந்த நடிப்பே வடிவேலுவை சந்திக்க வைத்தது.! பிரபல நாளிதழுக்கு பேட்டி கொடுத்த ரெடின் கிங்ஸ்லி.! வேற என்னெல்லாம் சொல்லியுள்ளார் தெரியுமா.?

redin kingsley
redin kingsley

சினிமா உலகில் சிறப்பான  படங்கள் சமீபகாலமாக வெளிவந்து மக்களை மகிழ்விக்கின்றன அந்த வகையில் அண்மையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயன்னுடன் கைகோர்த்து டாக்டர் என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார். இப்படம் சிறப்பான ஒரு மெசேஜை சொல்ல வந்தாலும் படம் முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி எடுத்திருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த திரைப்படத்தில் ஹீரோ சிவகார்த்திகேயனின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் அவரையே நடிப்பில் தூக்கி சாப்பிட்டவர்கள் ஒரு சிலர் இந்தப் படத்தில் நடித்தது தான் ஹைலைட் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி. ஆகியோரின் நடிப்பு வேற லெவல். இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்து மக்களும் சிரித்து கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் டாக்டர் படத்தில்  ரெடின் கிங்ஸ்லேயின் நடிப்பை பார்த்து பிரபலங்கள் புகழ்ந்து தள்ளி அதோடு மட்டுமல்லாமல் தற்போது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டுக்கொண்டு இவருக்கு வாய்ப்பை அள்ளி கொடுக்கின்றனர் இதனால் தற்போது தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைப்பற்றி நடிகர்களில் ஒருவராக இவரும் இருக்கிறார் அண்மையில் கூட நடிகர் வடிவேலுவை சந்தித்தார் ரெடின் கிங்ஸ்லி.

இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்டிற்கு பேட்டி கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியது நான் இதுவரை ஒரு சில படங்களில் நடித்திருக்கிறேன். முதலில் நான் நெல்சன் திலீப்குமார் உடன் கைகோர்த்து சிம்புவின் வேட்டை மன்னன் திரைப்படத்தில் தான் நடித்தேன் ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றதால் நான் மீண்டும் பழைய வேலைக்கு திரும்பினேன் ஆனால் நெல்சன் அப்போது என்னுடைய இப்ப இருக்கிற போட்டோவை அனுப்ப சொல்லுவார் நானும் அனுப்பினேன் இப்படி போய்க் கொண்டிருந்தது ஒரு கட்டத்தில் அவர் படங்களை எடுக்கும் போது எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அவர் தான் என்னை நடிகராக மாறினார் ஆனால் அப்போது கூட நான் நன்றாக நடிக்கிறேன என்பது எனக்கு தெரியாது ஆனால் அண்மையில் காமெடிக்கு பெயர்போன வைகைப்புயல் வடிவேலு என்னை அழைத்து உங்களது காமெடிகள் நான் நிறைய பார்த்திருக்கிறேன் சிறப்பாக இருக்கிறது நீங்களும் நன்றாக நடிக்கிறீர்கள் என கூறினார் அப்போதுதான் நான் நன்றாக நடிக்கிறேன் என்பதை உணர்ந்தேன் அதுவும் அவரது வாயால் இந்த பாராட்டைப் பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என கூறினார்.