என்னுடைய லட்சியமே விஜயை தூக்கி போட்டுட்டு மேல போறது தான் – தளபதி நண்பர்களிடம் சொன்ன அஜித்..!

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் இப்பொழுது தெலுங்கு பக்கத்திலும் மார்க்கெட்டை பிடிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் அஜித் மிகப் பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இவரது படத்தை எதிர்த்து நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் இருவரும் மோதிக்கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர் என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் விஜய் பற்றி பேசிய சம்பவம் ஒன்று இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் அஜித்தை சந்திக்க சென்றிருக்கிறார்கள் அவர்களை தனது கேரவனில் அமர வைத்து ஜூஸ் கொடுத்து உபசரித்துள்ளார் அஜித்..

அப்பொழுது பேசுகையில் எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் என்றால் உங்க நண்பரை ஜெயிப்பது தான் அவரை தூக்கி போட்டுட்டு எப்படியாவது மேலே சென்று விடுவேன் என கூறி இருக்கிறார் விஜய் நண்பர்கள் இதை விஜயிடம் கூறுகிறார்கள் அதற்கு விஜய் சிரித்துக் கொண்டு இதற்கு தனி கெத்து வேண்டும் என கூறினாராம் இந்த தகவல் தற்போது அஜித் – விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.