சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்தான் தளபதிவிஜய் இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்த மாபெரும் வெற்றி கண்டார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருவது மட்டுமின்றி கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் போஸ்டர் வெளியான உடனே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.
அந்தவகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த பல்வேறு பிரபலங்களும் தங்களுக்கு கிடைத்த அப்டேட்டுகளை இணையத்தில் வெளியாக்கி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்து வருகிறார்கள்.
ஏனெனில் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள காயத்ரி ஷான் இந்த திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அந்த வகையில் இவர் கூறிய விஷயங்கள் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் அவர் விஜயுடன் பேசும்பொழுது தளபதி விஜய் பிக்பாஸ் குறித்து பேசியுள்ளார். அதாவது இந்த திரைப்படத்தில் காயத்ரி ஷான் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்தவகையில் இது பற்றி தளபதி விஜய் அவரிடம் கமல் சார் உடைய நிகழ்ச்சி தானே நன்றாகத்தான் இருக்கும் போறீங்களா என்று கேட்டிருந்தார் மேலும் நான் நிகழ்ச்சிகள் அவ்வளவாக பார்ப்பது கிடையாது. நீங்கள் கலந்துகொள்வதாக இருந்தால் சொல்லுங்கள் கண்டிப்பா நான் பார்க்கிறேன் என்று கூரியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் நீ கலந்து கொண்டால் என்னுடைய 50 ஓட்டும் உனக்குதான் என்று கூறிவிட்டு பின் அடுத்த நாள் வந்தவுடன் என்ன முடிவு எடுத்தீர்கள் என்று கேட்டிருந்தார் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியவுடன் விஜய் சார் சரி ஓகே என கூறிவிட்டு சென்று விட்டாராம்.