ரஜினியை அடிக்க மறுத்ததால் வாய்ப்பை இழந்த பிரபலம்.! 25 வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த நடிகர்..

muthu
muthu

Jayaram missed muthu movie : 1995ஆம் ஆண்டு ரஜினி(rajini) நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் முத்து. இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார், அதுமட்டுமில்லாமல் ரஜினியுடன் இணைந்து மீனா, ரகுவரன் சரத்பாபு, ராதா ரவி, செந்தில் மற்றும் வடிவேலு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

திரைப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் முத்து திரைப்படம் மலையாளத் திரைப்படம் தேன்மாவின் கொம்பது என்ற திரைப்படத்தின் மறுஆக்கம் என கூறப்படுகிறது, இந்த திரைப்படத்தில் அனைவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் அதேபோல் நடிகர் சரத் பாபு கதாபாத்திரமாகவே அவர் அசத்தினார்.

அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி அடித்து வீட்டை வீட்டை விட்டு துரத்தும் காட்சி நிஜா ஜமீன் ஆகவே வாழ்ந்திருந்தார், சரத்பாபு நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் மலையாள நடிகர் ஜெயராம் தான் இந்த தகவல் 25 வருடம் கழித்து தற்போது தெரியவந்துள்ளது, அந்தக் கதாபாத்திரத்தில் முதலில் அவரை அணுகிய பொழுது ரஜினி அடிக்க மாட்டேன் என கூறி விட்டாராம்.

இந்த ஒரே காரணத்தால் அவ்வளவு பெரிய திரைப்படத்தை மிஸ் செய்ததாக இன்று வருத்தப்படுகிறாராம். இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெயராமன் கூறியுள்ளார், இந்தநிலையில் ஜெயராம் நடித்த இருந்தால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் எதார்த்தமாக சரத்பாபு நடித்திருந்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது.

ஜெயராம் அந்த திரைப்படத்தை தவிர்த்ததால் அதன் பிறகு ரஜினியின் எந்த திரைப்படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.