80 90 காலகட்டங்களில் இருந்து தற்பொழுது வரையிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து தான் சிறந்த இசை அமைப்பாளர் என்பதை தற்போது வரையிலும் தக்கவைத்துக்கொண்டு நம்பர் 1 இசையமைப்பாளராக வலம் வருகிறார் இளையராஜா.
ரஜினி,கமல் போன்ற டாப் ஜாம்பவான்கள் தொடங்கி இளம் நடிகர்களுக்கு வரை பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் பாடலை கொடுத்துள்ளார். நாம் யாருக்கு இசையமைத்தோம் என்பதையும் தாண்டி படத்தின் கதைக்கு ஏற்றவாறு இசையமைப்பது இளையராஜாவின் பழக்கம். இதனாலயே இன்றும் அவரது பெயர் சினிமா உலகில் கொடி கட்டிப் பறக்கிறார்.
இருந்தாலும் தற்பொழுது இருக்கின்ற காலகட்டத்திற்கு ஏற்றவாறு பாடல்களை அமைக்கவில்லை என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய ஒரு வருத்தமாக இருக்கிறது. தற்பொழுது இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய படங்களில் கமிட் ஆனாலும் தொடர்ந்து நல்ல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தாலும் அதை தட்டி விடுகிறார் இளையராஜா.
இருப்பினும் இளையராஜா அவ்வபொழுது ரசிகர்களை உற்சாகப்படுத்த இசை நிகழ்ச்சிகளை அமைத்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபகாலமாக பிரபலங்கள் பலரும் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். அந்த வகையில் பல நிகழ்ச்சிகள் வெற்றி கண்டு வருகின்றன.
அதில் ஒன்றாக தற்பொழுது சன் டிவியில் உருவாகவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் இசைஞானி இளையராஜா தொகுத்து வழங்குகிறார் சன் டிவி தொலைக்காட்சியில் ராஜபார்வை என்ற நிகழ்ச்சி புதிதாக உருவாக இருக்கிறது. அதில் அவர் தொகுப்பாளராக பணியாற்ற உள்ளாராம். மற்றபடி இதில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.