உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 4 வருடங்களுக்கு பிறகு மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசன் நடித்துள்ளார். இந்தப் படம் கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் இந்த படம் பல டெக்னீஷியன்களின் உதவியுடன் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனமான கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து மலையாள நடிகர் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா போன்ற டாப் நடிகர்கள் மற்றும் பல நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் நடித்து அசத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கடந்த மே 15-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு உள்அரங்கில் விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் நடைபெற்றது. அதில் விக்ரம் படக்குழுவினர் மற்றும் பல முக்கிய நடிகர்களான உதயநிதி ஸ்டாலின் சிம்பு, அனிருத், பா ரஞ்சித், காளிதாஸ் ஜெயராம் போன்ற பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதனை அடுத்து விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் சின்னத்திரையில் ஒளிபரப்பாக உள்ளதாம் அதன்படி பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருகிற 22-ஆம் தேதி மதியம் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் இந்த விக்ரம் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதனால் விக்ரம் படம் தியேட்டர் வெளியீட்டிற்கு பிறகு தமிழில் விஜய் டிவியிலும், மலையாளத்தில் ஏசியா நெட்டிலும், ஹிந்தியில ஸ்டார்ட் கோல்ட் சேனலிலும், கன்னடத்தில் ஸ்டார்ட் சுவர்ணாவிலும், தெலுங்கில் ஸ்டார் மா விலும் ஒளிபரப்பாக உள்ளது