thala ajith valimai movie update: தமிழ் சினிமா துறையில் தல அஜித் நடிக்கும் வலிமை என்ற படத்தின் அப்டேட் காக ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இந்தப் படத்தை வினோத் இயக்கி வருகிறார். ஏற்கனவே தல அஜித்தை வைத்து வினோத் நேர்கொண்ட பார்வை என்ற ஒரு படத்தை எடுத்து முடித்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதற்கு அடுத்து இவர்கள் இருவரையும் ஒன்றிணைக்கும் படமாக அமைந்தது வலிமை. ஆனால் கொரனோ தாக்கத்தினால் இந்த படத்தின் சூட்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் யுவன்சங்கர்ராஜா அவர்கள் வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே .
சமீப காலத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் வலிமை படத்தைப் பற்றி கேள்வி கேட்க அதற்கு யுவன் சங்கர் ராஜா படம் மாஸாக வரும் என்றும் இந்தப் படம் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது என்றும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
இதன் மூலம் அந்த நிகழ்ச்சியின் பேட்டியில் வலிமை படம் “செம்ம மாஸாக இருக்கும் “என்று கூறியுள்ளார். இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.