இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமூகப் பற்று கொண்டவர். அதுமட்டுமல்லாமல் இவர் சினிமாவிலும் நடித்துள்ளார் மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தனது கருத்தினை அவ்வப்போது இணையதளத்தில் பதிவிட்டு வந்தார். மேலும் இவர் தற்போது ஃபேஸ்புக்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்றதால் புகைப்பழக்கத்திற்கு அடிமையான இளம் நடிகை பற்றி பதிவிட்டுள்ளார்.விஜய் டிவியில் பிக் பாஸ் நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இவர் பதிவிட்ட இந்த பதிவு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
தற்போது உள்ள இளம் நடிகர், நடிகைகள் வாய்ப்புக்காக ஏங்கும் சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வாய்ப்பினை வைத்து திரையுலகில் நுழைந்து விடலாம் என்ற எண்ணத்தில் பிக்பாஸ் வாய்ப்புக்காக ஏங்கி உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் தொலைபேசி எதுவுமில்லாமல் வெளியுலக தகவல் எதுவும் தெரியாமல் ஒரே வீட்டில் எப்படி வாழ்கின்றார்கள் என்பதை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டு இருந்த அந்த பதிவில் அந்த இளம் நடிகையும் தானும் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்தி உள்ளார்கள் அங்கு மற்றவர்கள் அனைவரும் டீ குடிக்க சென்றார்கள். ஆனால் அந்த நடிகை டீ குடிப்பதில்லை என்று சொல்லி விட்டு தப்பா நினைத்து கொள்ளாதீர்கள் நான் கொஞ்சம் அந்த பக்கம் போயிட்டு வரேன் என்று கையில் இருந்த சிகரெட்டை காண்பித்துக் கண்ணாலேயே சைகை செய்தால்.
நான் இதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
புகைப்பிடித்து கொஞ்ச நேரம் கழித்து வந்த அவள் சாரி என நெளிந்தாள்.
எதுக்கு என்றேன். Shock இல்ல bit surprised didn’t know that you smoke என்றேன்.
எல்லாம் இந்த பிக் பாஸ்ஸால வந்தது. அந்த வீட்டுக்குள்ள போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வர முடியுமா என்றாள் அப்படியா என்று ஆச்சரியப்பட்டேன். ஆமா அங்க இருந்த டென்ஷன் பிரஷருக்கு இது ஒன்றுதான் பாக்கெட் பாக்கெட்டா கிடைக்கும். இதுக்கு முன்னாடி நீ ஸ்மோக் பண்ணுனதுல்ல. நோ நெவர் அந்த இன்கிளினேஷன் கூட கிடையாது பாவம் எங்க அம்மாவுக்கு தெரியாது. என அந்த நடிகை பேசியதை தனது பேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளார்.