ilaiyaraja emotionally speak about SPB health issue : இந்திய அளவில் மிகவும் பிரபலமடைந்த பாடகராக வலம் வருபவர் எஸ்பிபி பாலசுப்பிரமணியன் இவர் கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மேலும் உறுதிப்படுத்தப்பட்ட பின் சமூகவலைதளத்தில் தனது உடல்நிலை சீராக உள்ளது தெரிவித்திருந்தார் எஸ்பிபி.
மேலும் மருத்துவர்கள் கூட எஸ்பிபி அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர் இப்படியே வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் நிர்வாகம் திடீரென பரபரப்பு செய்தி ஒன்றை தெரிவித்தது அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக அதைத்தொடர்ந்து ICCU மாற்றப்பட்டதாக தெரிவித்தனர் இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென அவருக்காக பிரார்த்தனை பண்ணி வருகிறார்கள்.
இந்த நிலையில் நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா அவர்கள் எஸ்பிபி குணமடைய வேண்டி ஒரு உருக்கமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் பாலு நீ சீக்கிரம் எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன் சினிமாவில் தொடங்கிய சினிமாவில் மட்டும் முடிவதில்லை நமது வாழ்க்கை சினிமாவுக்கு முன்பாகவே மேடைக் கச்சேரிகளில் ஒன்றாக நம் பயணத்தை தொடங்கினோம்.
நமக்குள் எத்தனை சண்டைகள் நடந்தாலும் அவையெல்லாம் நமது நட்பு ஒருபோதும் பாதித்ததில்லை நீ மீண்டும் வருவாய் என எனது உள்ளுணர்வு சொல்கிறது அது உண்மையாகிவிடும் பாலு சீக்கிரம் எழுந்து வா என இளையராஜா உருக்கமான வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். எஸ்பிபி பாலசுப்பிரமணியன் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறது tamil360newz.com