சினிமாவை கௌரவிக்க அரசால் உருவாக்கப்பட்டது தான் தேசிய விருது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தேசிய விருதில் இந்தியாவில் வெளியான அனைத்து படங்களும் போட்டி போட்டு வருகின்றது. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒவ்வொரு பிரிவிலும் வழங்கப்படும் தேசிய விருதுகளை அதிகமாக வாரிச்சென்ற இசையமைப்பாளர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
கே வி மகாதேவன்:- தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளராக வலம் வந்தவர் தான் இசையமைப்பாளர் கே வி மகாதேவன். இவர் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் மட்டும் 218 திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். மேலும் கே வி மகாதேவன் இசை பிரிவில் இரண்டு தேசிய விருதை பெற்றுள்ளார்.
இளையராஜா:- இந்தியாவில் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசை அமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானார் அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படங்களில் 1000க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார் அதே சமயத்தில் இளையராஜா அவர்கள் தேசிய விருதை ஐந்து முறை வாங்கியுள்ளார்.
ஏ ஆர் ரகுமான் :- இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான். இவர் இசையமைத்த முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் தேசிய விருதை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட ஏ ஆர் ரகுமான் 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
வித்யாசாகர் :- இசையமைப்பாளர் வித்யாசாகர் தமிழ் பல திரைப்படங்களுக்கு பின்னணி இசை கொடுத்துள்ளார். இவர் தென்னக பிலிம் பேர் விருது,கேரள மாநில திரைப்பட விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் ஒருமுறை மட்டும் தான் தேசிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டி. இமான் அவர்களும் ஒரே ஒருமுறை மட்டும் தான் தேசிய விருது பெற்றுள்ளார்.