10 திரைப்படங்களுக்கு மேல் வெளிவராமல் பிரபல இசையாமைப்பாளரை ஒதுக்கிய தமிழ் சினிமா..! மனம் நொந்து போய் கஷ்டத்தை கொட்டி தீர்த்த தேவா..!

deva'

music director deva latest speech: தன்னுடைய இனிமையான குரலின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் தான் தேவா.  இவர் திரை உலகில் நுழைவதற்காக படாத கஷ்டங்களை அனுபவித்து தான் இந்த இடத்திற்கு வந்தாராம்.

நடிகர் தேவா பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் இசை அமைத்துள்ளார் அந்த வகையில் அத்தான், நரி, பூமரத்து பூங்குயில், செல்ல குயில் கிட்டத்தட்ட 13 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஆனால் இதுவரை இவர் இசையமைத்த எந்த ஒரு திரைப்படமுமே வெளியாகவில்லை இதன் காரணத்தினால் தேவா பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரே தெரிவித்திருந்தார்.

இவ்வாறு இவர் அனுபவித்த கஷ்டத்தை பார்த்து பல்வேறு பிரபலங்கள் ராசி இல்லாதவர் ஆகையால்தான் நீ இசையமைக்கும் எந்த ஒரு திரைப்படமே வெளியாகாமல் போய்விட்டது என அவருக்கு எதிர்மறையாகப் பேசி உள்ளார்களாம்.

இதனால் தேவா தன்னுடைய பெயரை நாடோடி சித்தன், மனோரஞ்சன் என மாற்றிக் கொண்டாராம்.  இந்நிலையில் தனக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராமராஜன் தான் என பல முறை அவரைப் பற்றி மேடையில் பேசி புகழ்ந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் ராமராஜனின் பல திரைப்படங்களில் தேவா பாடல்கள் பாடியுள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் தேவாவிற்கு அவர் பாடிய ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ என்ற பாடல்தான் அவருக்கு மிகவும் பிடிக்குமாம் மேலும் பலருக்கு வழிகாட்டியாக அமைந்தது யாரென்றால் எம்எஸ்வி என தெரிவித்துள்ளார்.

ஆனால் கவிஞர் கண்ணதாசன் மற்றும் எம்ஜிஆர் ஆகியவர்களுடன் இதுவரை பணியாற்றவே இல்லை என்பதுதான் அவருக்கு பெரிய வருத்தம் என கூறியுள்ளார்.

deva
deva