“கங்குவா” படத்தை பார்த்து மெய் சிலிர்த்துப் போன பிரபல இசையமைப்பாளர்.! வெளிவந்த முதல் விமர்சனம்

Kanguva

Kanguva : தமிழ் சினிமாவில் இன்று  முன்னணி நடிகராக வருபவர் சூர்யா இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெய் பீம், எதற்கு துணிந்தவன் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது தொடர்ந்து இயக்குனர் பாலாவுடன் இணைந்த வணங்கான் படத்தில் நடித்தார்.

அப்பொழுது இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் வந்து மனக்கசப்பானது இதனால் சூர்யா அந்த படத்தில் இருந்து விலகினார் உடனே இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து கங்குவா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.  மேலும் கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதிபாபு, நடராஜன் சுப்பிரமணியம், யோகி பாபு ரெடின்  கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

அண்மையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு glimpse வீடியோ வெளிவந்து வைரலானது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து காணப்படுகிறது.  கங்குவா படத்தின் ஷூட்டிங் காடு மலை போன்ற இடங்களில் படம் விறுவிறுப்பாக எடுத்துக் கொண்ட வருகிறதாம் இதற்கு சூர்யாவும் முழு ஒத்து உழைப்பு கொடுத்து வருகிறார் எனவும் பேசப்பட்டது.

இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு  தேவி ஸ்ரீ பிரசாந்த் மிரண்டு போய்விட்டாராம் இதனை சமீபத்தில் அவரை வெளிப்படையாக சொல்லியுள்ளார். அவர் சொன்னது கங்குவா படத்தின் சில காட்சிகளை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

devi sriprasad
devi sriprasad

மிகவும் அபாரமாக இருந்தது சூர்யா அவர்கள் தனது கேரக்டரில் மிகச்சிறந்த அளவில் நடித்துள்ளார். சிறுத்தை சிவாவின் திரைக்கதை வெறித்தனமான இருந்தது காட்சிகள் பிரமாண்டமாகவும் பிரேமில் மிகவும் அழகாக இருந்தது என கூறி உள்ளார்.