வெள்ளித்திரையில் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் தல அஜித் இவரது திரைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது தெரிந்தது தான் அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடித்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டும்மல்லாமல் வசூல் வேட்டையில் அதிகப்படியான வசூலித்து சாதனை படைத்தது.
மேலும் தல அஜித் தற்பொழுது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஹைதராபாத்தில் வலிமை படபிடிப்பு நடந்து வந்தபோது அஜித் பைக் வீலிங் செய்யும் போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் அறிந்தோம்.
வலிமை திரைப்படம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு முடிவடைந்து தற்போது சென்னையில் உள்ள பகுதிகளில் நடக்க உள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
அஜித் நடிக்கும் இந்த திரைப்படத்தைப் பற்றி ரசிகர்கள் பலரும் அப்டேட் கொடு என தயாரிப்பாளர் போனிகபூரிடம் பலரும் இணையதளத்தில் கேட்டு வந்தார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்திலிருந்து ஒரு அப்டேட் ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார்.
அதில் வலிமை படத்திற்காக இசையமைக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார் இவர் வெளியிட்ட இந்த புகைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.