அடுத்தடுத்து அனிருத்திற்கு நான்கு கார்களா.? இதுதான் அதிர்ஷ்டம் கூரையை பிச்சிகிட்டு கொட்டுறதோ.!

Anirudh ravichandar
Anirudh ravichandar

Anirudh Ravichander: சமீபத்தில் ஜெயிலர் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருந்தார். அப்படி பாடல்களுக்கும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க சன் பிரக்சஸ் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் போர்ஸ் கார் ஒன்றை நேற்று அனிருத்திற்கு பரிசாக வழங்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில வாழ்த்தினார்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இவ்வாறு இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த், இயக்குனர்கள் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு லாபத்தில் இருந்து செக் மற்றும் சொகுசு காரை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தினார்.

அதுவும் முக்கியமாக அனிருத்துக்கு மூன்று சொகுசு கார்களை நிறுத்தி அதில் ஒரு காரை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளுமாறு கலாநிதி மாறன் சொல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக திரையுலகினார் மற்றும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. எனவே இதனை அடுத்து அனிருத் இசையில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர்கள் நடித்துவரும் ஜவான் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

எனவே ஜெயிலர் படத்தினை விட கண்டிப்பாக ஜவான் திரைப்படம் அதிக வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இதற்காக அனிருத்துக்கு ஷாருக்கான் காரை பரிசாக வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். எனவே தயாரிப்பாளர் லலித் குமார் கலாநிதி மாறனை போல அனிருத்துக்கு சொகுசு காரை பரிசாக வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ஜவான், லியோ இரண்டு திரைப்படங்களையும் தொடர்ந்து லைகா தயாரிப்பில் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார் எனவே இதற்காகவும் கார் பரிசாக வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே இவ்வாறு அடுத்தடுத்து தொடர்ந்து அனிருத்துக்கு சொகுசு கார்கள் பரிசாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.