தமிழ் சினிமா உலகிற்கு வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிலும் முக்கியமாக தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
திரைப் படத்தில் ரஜினியுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர். அதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது .இப்படத்தினை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் பாண்டிய ராஜன் மற்றும் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் முருகதாஸ் மற்றும் விஜய் வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.முருகதாஸ் மற்றும் விஜய் படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 100 கோடியை ஒதுக்கி உள்ளது. ஆனால் முருகதாஸ் 140 கோடி பட்ஜெட் திட்டமிட்டுள்ளார் இதனையடுத்து அவர்கள் சற்று ஷாக்காகி உள்ளனர்.
சினிமாவுலகில் சிறப்பான பல வெற்றி படங்களை கொடுத்தவர் இதன் மூலம் தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.இதன் காரணமாக தனது சம்பளத்தையும் ஒவ்வொரு படத்திற்கும் அதிகரித்துக்கொண்டே வருகிறார். அந்த வகையில் இவர் இப்படத்திற்கும் சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஷாக்காகி உள்ளது.
இதற்கு காரணம் கேட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், தான், ஒரு சிறந்த இயக்குனர் தனக்கென ஒரு லெவல் இருக்கிறது. அதனால் இப்படம் தமிழகம் தாண்டி பிற மொழிகளிலும் சிறப்பாக ஓடும் என கூறினாராம்.
ஆனால் விஜய் அவர்களுக்கும் பிற மாநிலங்களும் நல்ல மார்கெட் இருப்பதால் அவர் நடிக்க இருப்பதால் அவருக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கலாம் உங்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என ஒருபுறம் கேள்வி எழுப்பியும் வருகின்றனர் இருப்பினும் சற்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் க்கு 100 கோடி போனால் மீதி படத்தின் பட்ஜெட் 40 கோடி ஆகவே இருக்கும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அண்ணாத்தா படம் முடிந்த பிறகுதான் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணி படத்தை பற்றி பேச்சு அடிபடும் என கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றன.