இந்திய சினிமாவையே திரும்பிப் பார்த்த இயக்குனர்களில் ஏ ஆர் முருகதாஸ் அவர்களும் ஒருவர் ஆனால் சமீப காலமாக ஏ ஆர் முருகதாஸ் திரைப்படங்கள் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யாமல் இருப்பதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
இப்படி ஏ ஆர் முருகதாஸ் ஹிட் படங்களைக் கொடுக்க தவறியதால் முன்னணி நடிகர்கள் பலரும் பட வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள். ரஜினி நடிப்பில் வெளியாகிய தர்பார் திரைப்படம் முருகதாஸ் அவருக்கு கைகொடுக்கவில்லை. தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் நஷ்ட ஈடு கேட்டு முருகதாஸ் வீட்டிற்கு படை எடுத்தார்கள்.
இந்த நஷ்ட ஈட்டை சரி கட்ட சன் பிக்சர் நிறுவனத்துடன் சேர்ந்து தளபதி 65 திரைப்படத்தை இயக்கி ஈடு கட்டி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் விஜய்க்கு கதை பிடிக்காததால் முருகதாஸ் அவர்களை கழட்டிவிட்டு இளம் இயக்குனர் நெல்சன் திலீப் அவர்களுடன் இணைந்து விட்டார்.
தளபதி விஜய் முன்னணி இயக்குனரை விட்டுவிட்டு இளம் இயக்குனருடன் இணைந்தால் முருகதாஸ் அவர்களுக்கு பெருத்த அவமானமாக ஆகிவிட்டது அதனால் எப்படியாவது விஜய் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்ததும் கூட தனக்கு அப்படி ஒரு வாய்ப்பு இதுவரை வரவில்லை எனவும் அப்படி கிடைத்தால் கண்டிப்பாக பணியாற்றுவேன் எனவும் கூறினார்.
இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் விஷால் அவர்களிடம் தஞ்சம் அடைந்துள்ளார் விஷாலும் சில காலமாக ஹிட் திரைப்படங்களை கொடுக்க தவறிவிட்டதால் இருவரும் இணைந்து ஒரு மாபெரும் ஹிட் படத்தை கொடுக்க போவதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து கிசுகிசுப்பு கிளம்பிவிட்டது. இருவரும் இணைவார்களா மாட்டார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.