முரளி எனக்கு பச்சை துரோகம் செய்துவிட்டார்.! பல வருடங்களுக்கு பிறகு உண்மையை உடைத்த தேவயானி கணவர்..

murali
murali

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து பிறகு யாரும் எதிர்பார்க்காத நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தவர் தான் நடிகர் முரளி. இந்நிலையில் தற்பொழுது நடிகர் முரளி என்னை 25 வருடங்களாக தன்னை ஏமாற்றிவிட்டதாவும் அதனால் மன வேதனையில் இருப்பதாகவும் அவருடைய நண்பர் இயக்குனர் ராஜ்குமார் அளித்துள்ள பேட்டி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ராஜகுமாரன் இவர் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் 1999ஆம் ஆண்டு வெளிவந்த நீ வருவாய் என திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் இயக்கியும், நடித்தும் வந்தார்.

இவருடைய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் ராஜ்குமார் நடிகை தேவயானி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் ராஜகுமாரன் அவர்கள் சமீபத்தில் முரளி பற்றி கூறியிருக்கிறார். அது குறித்து அவர் கூறியதாவது, நடிகர் முரளியும் நானும் 25 வருட நண்பர்கள் அவர் நடித்த முதல் படத்திலிருந்து நான் அவருடன் பணியாற்றி இருக்கிறேன்.

அப்பொழுதிலிருந்து முரளியுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது நல்ல நண்பர்களாக இருந்தோம் அப்படி இருந்தும் அவர் நான் எடுத்த படத்தின் பொழுது ஒழுங்காக சூட்டிங் வரவில்லை ரொம்ப கஷ்டம் கொடுத்து விட்டார். ரொம்ப தவறாக தொழில் ரீதியாக நடந்து கொண்டார் அதனால் தான் நான் சினிமாவை போடா என்று ஒதுக்கி வைத்து விட்டேன்.

இதுவரை நான் 10 லட்சம் கூட சம்பாதித்து இருக்க மாட்டேன் பணத்திற்காக நான் சினிமாவில் இருக்கவில்லை அதன் மீதுள்ள காதலினால் தான் நான் சினிமாவிற்கு வந்தேன். அதேபோல் விஜயகுமார் சார் என்னிடம் அருண் விஜய் பற்றி கேட்டிருந்தார் படம் எடுக்க சொன்னார் நான் முடியாது இப்ப நான் படம் பண்ணுவதில்லை என்று சொல்லிவிட்டேன் அதோடு மட்டுமில்லாமல் நான் சில புத்தகங்களை படித்திருந்ததால் எனக்கு ஜாதகம் பற்றி ஒரு அளவு தெரியும்.

அப்பொழுது அவரிடம் 20 வருடத்திற்கு பிறகு நான் உங்களுடைய மகனின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என சொன்னேன் அதேபோல் தற்பொழுது அவர் வில்லனாகவோ, ஹீரோவாகவும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார் என பல சுவாரசியமான விஷயங்களை இயக்குனர் ராஜ்குமார் அவர்கள் கூறியிருக்கிறார். மேலும் ராஜ்குமார் மற்றும் முரளி இவர்களுடைய கூட்டணியில் 2003ஆம் ஆண்டு காதலுடன் என்ற திரைப்படம் வெளியானது இந்த படத்தில் தான் முரளி சரியாக நடித்து தரவில்லை.