இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் வெற்றிகரமாக நடத்தப்படுகிறது இதுவரை 15 சீசன்கள் முடிந்த நிலையில் 16 வது சீசன் வெகு விரைவிலேயே தொடங்கப்படுகிறது அதற்கு முன்பாக ipl நிர்வாகம் ஒவ்வொரு அணிக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அதாவது முக்கிய வீரர்களை தகவைத்துக் கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்ய சொன்னது
அதன்படி ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது. இதனால் மினி IPL ஏலம் நடக்குகிறது. இதில் பல வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். குறிப்பாக இந்த மினி ஏலத்தில் பல வெளிநாட்டு அதிரடி ஆட்டாக்காரர்கள் களமிறங்கி உள்ளதால் ஐபிஎல் 10 அணிகள் முக்கிய வீரரை தட்டி தூக்க அதிகம் ஆர்வம் காட்டும் என கூறப்படுகிறது
அந்த வகையில் ipl மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி யார் யாரை வாங்கும் என்பது குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளன.. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி ஆல் ரவுண்டராக இருந்த பொல்லார்ட் வெளியேறினார். இதனால் அந்த இடத்தை நிரப்ப ஒரு சிறந்த வீரரை ஏலத்தில் எடுக்க உள்ளது.
அந்த வகையில் இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் அல்லது பென்ஸ் ஸ்டோக்ஸ் இருவர்களில் யாரேனும் ஒருவரை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து இன்னொருவரையும் மும்பை இந்தியன்ஸ் அணி டார்கெட் செய்யும் என கூறப்படுகிறது
அந்த வீரர் வேறு யாரும் அல்ல ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் ராசாவை குறி வைக்குமாம்.. மேலும் சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹாசாரே போன்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இளம் வீரர்களையும் தட்டி தூக்க மும்பை இந்தியன்ஸ் அணி திட்டம் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.