“துப்பாக்கி” திரைப்படம் 100 கோடி வசூல் அள்ளினாலும்.. எங்களுக்கு நஷ்டம் தான் – உண்மையை உடைக்கும் பிரபல விநியோகஸ்தகர்

Vijay
Vijay

Vijay : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக உருவான வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு  வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் போஸ்ட் பிரமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. செப்டம்பர் இறுதி வாரத்தில் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவும் படகுழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

இந்த நிலையில் விஜயின் துப்பாக்கி படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால்  நடிப்பில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி 100 கோடி மேல் வசூல் அள்ளி புதிய  சாதனை படைத்தது.   விஜய் கேரியரில் முதல் 100 கோடியைதொட்ட திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட துப்பாக்கி திரைப்படம் தெலுங்கில் சொல்லும் கொள்ளும்படி ஓடவில்லை என  தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி படத்தை தெலுங்கில் வாங்கிய விநியோஸ்தகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது அவர் சொன்னது.. துப்பாக்கி திரைப்படம் தங்களுக்கு 2.75 கோடி ரூபாய் நஷ்டத்தை கொடுத்தது என வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் விஜயின் பெஸ்ட் படங்களில்  துப்பாக்கி  படம் இருக்கும்..  அப்படிப்பட்ட துப்பாக்கி தெலுங்கில் இப்படி நஷ்டத்தை கொடுத்துள்ளதா என கூறி அதிர்ந்து போய் உள்ளனர்.  மேலும் இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது காட்டு தீ போல பரவி வருகிறது