முதல்வன் திரைப்படத்தில் முதலில் யார் நடிக்க இருந்தது தெரியுமா.? அட அதுவும் இந்த ஸ்டார் நடிகரா.? விஜய் இல்லிங்கோ இது வேற

mudhalvan
mudhalvan

1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் முதல்வன், இந்த திரைப்படத்தில் மனிஷாகொய்ரலா, சுஷ்மிதா சென், ரகுவரன் மணிவண்ணன், வடிவேலு, லைலா, விஜயகுமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள், படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதை தட்டிச்சென்றது, அதுமட்டுமில்லாமல் ரசிகரிடம் நல்ல வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, பாக்ஸ் ஆபீஸில் அந்த கட்டத்தில் இந்த திரைப்படம் தான் மிகப்பெரிய வசூல் என கூறப்பட்டது.

இந்த திரைப்படத்தில் அர்ஜுன் நடிப்பதற்கு முன் பல முன்னணி நடிகர்களிடம் இந்த கதையை சங்கர் கூறியுள்ளார், முதலில் ஷங்கர் முதல்வன் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூறியுள்ளார், ஆனால் அரசியல் கதிக்கலாமாக இருந்ததால் ரஜினி சூசகமாக கதையை நிராகரித்தார், அதுமட்டுமில்லாமல் ரஜினியை அப்பொழுதே அரசியலில் ஈடுபடுத்த பலரும் முயற்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஷங்கர் முதல்வன் கதையை கமலஹாசனிடம் கொண்டு சென்றார், சங்கர் கதையை கூறிய பிறகு இந்த கதையில் நடிப்பதற்கு கமலஹாசனுக்கு ஈடுபாடு இல்லை என்பதால் அதை வெளியே கூறாமல் கால்ஷீட் பிரச்சனை எனக் கூறி மறுத்து விட்டாராம்.

அதன்பிறகுதான் இந்த கதை தளபதிவிஜய் இடம் சென்றது, விஜயும் இந்த திரைப்படத்தில் நடிக்காமல் கால்சீட் காரணத்தை காட்டி ஒதுக்கி விட்டாராம், பல முன்னணி நடிகர்கள் இந்த கதையில் நடிக்காததற்கு காரணம் ஒரே நாளில் முதல்வராக ஆகுவது போன்ற கதைக்களம் தான்.

ஒரே நாளில் முதல்வராவது நம்ப முடியாத விஷயமாக இருப்பதால்தான் இந்த படத்தை பல முன்னணி நடிகர்கள் நிராகரிதுள்ளர்கள், நம்ப முடியாத காட்சிகள் இருந்தாலும் பிறகு அர்ஜுன் முதல்வன் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் பின்பு இந்த திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது, இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து முன்னணி நடிகர்கள் அனைவரும் வருந்தியது குறிப்பிடத்தக்கது.