வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றி காண்பவர் உலக நாயகன் கமலஹாசன். இருப்பினும் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை ரொம்ப பிடித்து போக விக்ரம் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
படம் ஒருவழியாக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. வழக்கம்போல போதைப்பொருள் கும்பலை தடுப்பது மற்றும் தனது குடும்பத்தை காப்பது போன்ற கதையாக இருந்தாலும் சற்று வித்தியாசமாக இருந்ததால் தற்போது தமிழகம் தாண்டி மற்ற ஏரியாக்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தின் கதைக்கு ஏற்றவாறு கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் விக்ரம் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிச்சயமாக விக்ரம் திரைப்படம் வசூலில் 400 அல்லது 500 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனையை படைக்க இருக்கிறதே இது கமல் கேரியரில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக அமைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் கமலின் விக்ரம் படம் பதினோரு நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் சுமார் 130 கோடி வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது தமிழகத்தில் விசுவாசம், பிகில், பாகுபலி ஆகிய படத்தின் வசூலில் முறியடிக்க விக்ரம் திரைப்படம் இன்னும் சில கோடிகளை அள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.