சாய் பல்லவியை தொடர்ந்து சென்சேஷன் நடிகையை வளைத்து போட்ட சிவகார்த்திகேயன்.. எஸ்கே 22 பட ஹீரோயின் இவர்தான்

sai pallavi
sai pallavi

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து  கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருவதனால் இவரை வைத்த படம் இயக்க ஏராளமான இயக்குனர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். சிவகார்த்திகேயனும் தொடர்ந்து பல படங்களை நடிப்பதற்காக கமிட்டாகி வருகிறார்.

பொதுவாக சிவகார்த்திகேயனின் படம் என்றாலே தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்க்கும் படமாக அமைவதனால் எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் இவருடைய படத்திற்கு தனி மவுசு இருந்து வருகிறது. அப்படி கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது.

அந்த வகையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் எஸ்கே 21 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கும் நிலையில் கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க இருக்கிறது.

இவ்வாறு எஸ்கே 21 படத்தினை முடித்துவிட்டு அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 22வது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்து இதுவரையிலும் அதிகாரப்பூர்வமானதாக தகவல் வெளியாகவில்லை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து கூடுதல் தகவல் என்னவென்றால், எஸ்கே 22 படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சென்சேஷன் நடிகை நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றினை பெற்ற சீதா ராமம் படத்தில் ஹீரோயினாக நடித்த மிருணாள் தாகூர் தான் எஸ்கே 22 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம்.