கடற்கரையில் கிழிந்த பேண்டுடன் இருக்கும் மிருணாளினி ரவியின் புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்!!

ravi
ravi

Mrinalini new look photos: சினிமாவில் நுழைய திறமை இருந்தால் போதும் என பலர் நிரூபித்து வருகின்றனர். அதனை வெளிப்படுத்த ரியாலிட்டி ஷோ மற்றும் மேடை போன்றவற்றில் தனது திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் வாய்ப்பை பெற்று வருகின்றனர். ஆனால் மிருணாளினி ரவி அவர்கள் சமூக வலைதளத்தின் மூலம் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபகாலமாக யூடியூப் சேனல் டிக்டாக் போன்றவற்றில் திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று கவனத்தை ஈர்த்தவர்.

மிருணாளினி ரவி யூடியூப் மற்றும் டிக் டாக்கில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் சினிமா படத்தில் வரும் பஞ்ச் டயலாக், பாடல்கள் என பலவற்றை  எடுத்து நடித்து வந்தார். இதன்மூலம் அவர் சினிமா வட்டாரங்கள் முன்பு பெரிதும் பேசப்படும் நபராக மாறினார். இதனை அடுத்து அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் இவர் முதன்முதலில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து அவர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட ஜிகர்தண்டா படத்தில் மேலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.இதனையடுத்து அவர் பல படங்களில் கமிட்டாகி உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் மிருணாளினி. அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்த நிலையில் தற்போது தனது ரசிகர்களை மேலும் கவரும் வகையில் கிழிந்த பேண்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதுகல படுத்தி வருகிறார்.

ravi
ravi

இவரை போலவே பலரும் டிக்டாக்கில் தனது திறமையை வெளிப்படுத்தினர். ஆனால் ஒரு சிலரோ தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தனர்.

mirna
mirna