தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் மிருணாள் தாகூர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சின்னத்திரையின் மூலம் சினிமாவில் பிரபலமடைந்த தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மிருணாள் தாகூர் இயக்குனர் ஹனு ராவகபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற சீதா ராமம் படத்தில் ஹீரோயினாக மிருணாள் தாகூர் நடித்து அசதி இருந்தார்.
பான் இந்திய படமாக வெளியான இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த படத்தின் மூலம் மிருணாள் தாகூர் திரைவுலகில் வெற்றியினைக் கண்டார். இந்த படம் இவருடைய சினிமா கேரியர் மிக முக்கியமான படமாக விளங்கிவரும் நிலையில் தொடர்ந்து இவருக்கு பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் மிருணாள் தாகூர் சூர்யாவின் 42வது படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் இவர் நடிக்க வைக்க இயக்குனர்கள் இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு சினிமாவில் பிரபலம் அடைந்துள்ள மிருணாள் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ஒரு படத்திற்கு ரூபாய் 6 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நானிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்த படத்தில் ரூபாய் ஆறு கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவ்வாறு குறுகிய காலத்திலேயே சினிமாவில் பிரபலமடைந்து தற்பொழுது முன்னணி நடிகைகள் அளவிற்கு பெருந்தொகையை சம்பளமாக வாங்கி வருகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.