சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாட்களில் திரையுலகில் நடிகராக வருவர்கள் வெகுகுறைவு . தமிழ் சினிமா உலகில் திறமை இருந்தால் மட்டுமே சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அதே போல தான் ரசிகர்களும் ஒரு நடிகரை ஏற்றுக்கொள்ள அவரது திறமை மற்றும் செயல்களைப் பொறுத்துதான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.அது போல தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர தொடங்கி உள்ளவர்தான் நடிகர் அருண்விஜய்.
இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது அதிலும் சினிமா உலகில் பல தரப்பட்ட விஷயங்களில் பின்தங்கி அதன் தனது விடா முயற்சியின் மூலம் முயற்சித்து தற்பொழுது தமிழ் சினிமா உலகில் வீரநடை போட்டு வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமா உலகில் முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
மேலும் இத் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளி படுத்தி அதன் மூலம் முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அருண் விஜய் குழந்தையாக இருக்கும்போது தமிழ் சினிமா உலகின் நாயகன் எம்ஜிஆர் அவரின் மடியில் அமர்ந்திருக்கும் இப்படம் தற்போது சமூக வலதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.