தமிழில் வெளியான வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படங்கள்.! முழு லிஸ்ட் இதோ

movie
movie

தமிழ் சினிமாவில் உள்ள வரலாறு சார்ந்த திரைப்படங்களின் பட்டியல்தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

பொன்னர் சங்கர்:- கலைஞரின் கைவண்ணத்தில் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், பூஜா சோப்ரா, விஜயகுமார், பொன்வண்ணன்,பிரகாஷ் ராஜ்,சினேகா, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது பொன்னர் சங்கரின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

தெனாலிராமன்:- யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மூன்று வருடங்கள் கழித்து வடிவேலு அவர்கள் நடித்துள்ளார். இதுவும் ஒரு வரலாறு குறிப்பிட்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக தான் அமைந்தது.

இம்சை அரசன் 23ம் புலிகேசி :- சிம்பு தேவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியானது.  இந்த படத்தில் வடிவேலு, நாசர், இளவரசி, மோனிகா, மனோரமா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வெள்ளையர்களுக்கு அடிமையாக இருந்ததை பற்றியும் ஒரு முட்டாள் அரசன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதையும்  பற்றி விளக்கமாக எடுத்துரைத்துள்ளது இந்த திரைப்படம்.

காவியத்தலைவன் :- வசந்தபாலன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காவியத்தலைவன். இந்த திரைப்படத்தில் பிரித்திவிராஜ், சித்தார்த், வேதிகா, நாசர்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்டத்தின் போது நாடகம் நடிக்கிறவர்களுக்கு என்னென்ன இன்னல்கள்  ஏற்படுகிறது என்பதையும் அதை எப்படி சமாளித்து வருகிறார்கள் என்பதையும் தெளிவாக எடுத்துரைக்கும் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

கோச்சடையான்:- சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், சரத்குமார், ஆதி, தீபிகா படுகோனே, விஜயகுமார், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தளபதியாக இருக்கக்கூடிய ஒருவர் தலைவனாக மாறி இந்த நாட்டை எப்படி பாதுகாக்கிறது என்று அழகாக எடுத்துரைத்த திரைப்படம் தான் கோச்சடையான்.

அரவான்:- இந்த திரைப்படம் வெங்கடேசன் அவர்கள் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அரவான். இந்த திரைப்படத்தில் ஆதி, பசுபதி, தன்சிகா, சிங்கம் புலி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம்  பழங்குடி மக்களையும், அங்கு வாழும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் கிராமத்து சாயலில் எடுத்துள்ளார் இயக்குனர் வெங்கடேசன் அவர்கள்.

ஹேராம் :- கமலஹாசன் அவர்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் கமலஹாசன், ஷாருக்கான், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் அரசியலை முன்வைத்து இயக்கியிருப்பார் நடிகர் கமலஹாசன்.

பரதேசி:- பாலா அவர்களின் இயக்கத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா, ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒட்டுமொத்த கதை என்னவென்றால் அப்பாவி மக்களை தேயிலைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை அடிமையாக மாற்றி துன்புறுத்துகிறார்கள் இதுவே இந்த படத்தின் கதையாகும்.

ஆயிரத்தில் ஒருவன் :- செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. சோழர்களின் வரலாற்றை கதையாக எடுத்த திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

கர்ணன்:- பி ஆர் பந்துலு அவர்களின் இயக்கத்தில் சிவாஜி கணேசன், என்டி ராமராவ், தேவிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1964ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. கொடை வள்ளல் என்று எல்லாராலும் அழைக்கப்படுபவர்  கர்ணன் அவருடைய வரலாற்றை அப்படியே உருவாக்கிய திரைப்படம் தான் கர்ணன்.