தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள் நடிகர் கமல் மற்றும் ரஜினி இவர்கள் இருவரும் போட்டி போட்ட நிலையில் ரசிகர்கள் இவர்களுக்கு ஏராளமான வரவேற்பை கொடுத்தனர் அதனைத் தொடர்ந்து அடுத்ததாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர்களில் ஒருவராக விஜய் மற்றும் அஜித் திகழ்ந்து வருகிறார்கள்.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல்ஹாசன், அவருக்கு பிறகு ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படங்கள் விஜய் அஜித் திரைப்படங்களாக தான் இருக்கிறது அந்த வகையில் நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதி கொண்ட திரைப்படங்களின் தரவரிசை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
தீனா- பிரண்ட்ஸ் :- ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் தீனா. இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் நடிகர் அஜித் ஒரு ஆக்சன் ஹீரோவாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தீனா வெளியான அதே தினத்தில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படம் வெளியானது இந்த திரைப்படம் மலையாள திரைப்படத்தின் ரீமேக் படம் ஆகும். 2001ல் மோதிக்கொண்ட அஜித் விஜய் திரைப்படங்களில் தீனா தான் வெற்றி அடைந்தது.
வில்லன்- பகவதி:- 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு நடிகர் விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான வில்லன் மற்றும் பகவதி திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இதில் விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படம் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது.
திருமலை- ஆஞ்சநேயா :- 2003 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான ஆஞ்சநேயா திரைப்படமும் விஜய் நடிப்பில் வெளியான திருமலை திரைப்படமும் ஒரே நாளில் மோதிக்கொண்டது இதில் நடிகர் விஜயின் திருமலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அஜித்தின் ஆஞ்சநேயா பெரிதும் ரீச் ஆகாமல் தோல்வியை சந்தித்தது.
பரமசிவன் – ஆதி:- மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்தின் பரமசிவன் திரைப்படமும் விஜயின் ஆதி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இதில் விஜயின் ஆதி திரைப்படத்தை விட அஜித்தின் பரமசிவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது ஆனால் இரண்டு படமும் ஆவரேஜான படமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
போக்கிரி – ஆழ்வார்:- 2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அஜித்தின் ஆழ்வார் படமும் விஜயின் போக்கிரி படமும் வெளியானது இதில் விஜயின் போக்கிரி படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து வசூலிலும் பல சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய்க்கு ஒரு திருப்புமுனை படமாக இந்த திரைப்படம் அமைந்தது.
வீரம் – ஜில்லா :- போக்கிரி மற்றும் ஆழ்வார் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து அஜித்தின் வீரம் விஜய்யின் ஜில்லா திரைப்படம் ஒரே நாளில் வெளியாகியது. இதில் விஜயின் ஜில்லாவை விட அஜித்தின் வீரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
துணிவு – வாரிசு :- கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் 2023 ஆம் ஆண்டு துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் மூலம் மறுபடியும் மோதி கொண்டனர். இதில் விஜயின் வாரிசு திரைப்படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி உள்ள நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கிறது இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் விஜயின் வாரிசு படத்தை விட அஜித்தின் துணிவு திரைப்படம் அதிக வசூல் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதை தொடர்ந்து நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு மறுபடியும் மோத இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாக உள்ள ஏ கே 62 திரைப்படம் ஜனவரி 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.