திரைப்படங்களின் வெற்றியோ தோல்வியோ அது எல்லாத்திற்கும் நடிகர் தான் காரணம் என்று ரசிகர்கள் அவரை ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் ஒரு சில திரைப்படங்கள் காமெடி நடிகர்களுக்காகவே ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகைகளுக்காக ஒருசில திரைப்படங்கள் ஓடியது உண்டு இதேபோல் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகைகள் மற்றும் அந்த திரைப்படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
மனதில் உறுதி வேண்டும் :- இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சுகாசினி மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் நடிப்பில் வெளியான திரைப்படம் மனதில் உறுதி வேண்டும் இந்த திரைப்படத்தில் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோர் கௌரவத் தோற்றத்தில் நடித்து உள்ளனர். இந்தத் திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.
மகளிர் மட்டும் :- மூன்று பெண்கள் ஒரு கொலை வழக்கில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த திரைப்படத்தின் கதையாகும் இந்த திரைப்படத்தை சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் ரேவதி, ஊர்வசி, ஆகியோர் நடித்துள்ளனர்.
சிநேகிதியே :- கல்லூரியில் படிக்கும் போது 3 பெண்கள் அந்த கல்லூரியில் நடந்த ஒரு கொலை வழக்கில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்கிறார்கள் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த திரைப்படத்தின் கதை ஆகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் அவர்கள் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் ஜோதிகா மற்றும் தபு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தென்மேற்கு பருவக்காற்று :- கல்யாணமான சிறு ஆண்டுகள் கழித்து தனது கணவரை இழந்து விட்டு தனது மகனை பாதுகாப்பாக வளர்க்கும் ஒரு தாயின் கதை தான் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம். இந்த திரைப்படத்தில்தான் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தை சீனு ராமசாமி அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு தாயாக நடித்தவர் தான் வசுந்தரா கஷ்யப்.
மாயா :- தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா இவர் நடிப்பில் வெளியான திகில் திரைப்படமாக உருவான திரைப்படம் தான் மாயா இந்தத் திரைப்படத்தில் ஆரி அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
36 வயதினிலே :- நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே திரைப்படத்தை மலையாளத் திரையுலகில் உருவான ஹொவ் ஓல்ட் ஆர் யூ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் தான் 36 வயதினிலே. இந்த திரைப்படமும் பெண்களை மையமாக வைத்து உருவாக்கிய திரைப்படம்.
இறுதிச்சுற்று :- சர்வதேச பெண்கள் கூத்து சண்டை போட்டியில் ஒரு சாதாரண பெண் கலந்து கொண்டு அதில் வெற்றி பெறுகிறார் என்பது இந்த திரைப்படத்தின் கதை ஆகும். இந்த திரைப்படத்திற்காக ஒரு நிஜ குத்துச்சண்டை போட்டியாளரை நடிக்க வைத்து வெற்றி பெற்றுள்ள திரைப்படம். இந்த திரைப்படத்தில் மாதவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அருவி :- பல தரப்பு மக்களை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அருவி இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் வெற்றி கண்டது. மேலும் இந்த திரைப்படத்தில் அதிதி பாலன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அறம் :- ஒரு கலெக்டர் மக்களுக்காக உதவும் பொழுது அந்த கலெக்டருக்கு அரசியல்வாதிகளால் ஏற்படும் சில இன்னல்களை எப்படி தீர்க்கிறார். மற்றும் மக்களுக்கு எப்படி உதவி செய்கிறார் என்பதை திரைப்படத்தின் கதையாகவும் இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா அவர்கள் நடித்துள்ளார்.
கனா :- ஒரு விவசாயின் மகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வம் கொள்கிறார் எப்படி அவர் அந்த போட்டியில் கலந்து கொள்ளிறார் எப்படி விளையாடி சாதிக்கிறார் என்பதே இந்த திரைப்படத்தின் கதையாகும். இந்த திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கோலமாவு கோகிலா:- இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் முதல் திரைப்படம் தான் கோலமாவு கோகிலா. இந்த திரைப்படத்தில் யோகி பாபு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் நகைச்சுவை கலந்த சுவாரசியமான கதை அம்சம் கொண்டுள்ளது.