தமிழ் சினிமாவில் என்னதான் ஏராளமான நடிகர்கள் இருந்தாலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து விட்டு பிறகு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த நடிகர்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
நடிகர் வடிவேலு இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் காமெடியில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று சொல்லுமளவிற்கு இவரது நடிப்பு அவ்வளவு அருமையாக இருக்கும் இவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் என்னவென்றால் தெனாலிராமன், இந்திரலோகத்தில் நான் அழகப்பன், இம்சை அரசன் 24ம் புலிகேசி, எலி போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
விவேக் இவரும் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் இவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் என்னவென்றால் செந்தூரதேவி, விரலுக்கேத்த வீக்கம், நம்ம வீட்டு கல்யாணம், நான்தான் பாலா, பாலக்காட்டு மாதவன், எழுமின், வெள்ளைப் பூக்கள், போன்ற திரைப்படங்களில் விவேக் அவர்கள் ஹீரோவாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக களம் இறங்கி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த திரைப்படங்கள் இதோ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படிதான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ 1, டகால்டி, போன்ற திரைப்படங்களில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் தான் யோகிபாபு இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் ஹீரோவாகவும் ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் என்னவென்று தற்போது நான் பார்ப்போம் தர்மபிரபு, ஜாம்பி, கூர்கா போன்ற திரைப்படங்களில் யோகி பாபு அவர்கள் ஹீரோவாக நடித்துள்ளார்.