சமீப காலங்களாக ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது அதாவது திரைப்படங்களில் தொடர்ந்து பல ரசிகர்கள் படங்களை பார்த்து வந்தாலும் மேலும் பலர் ஓடிடியில் வீட்டில் அமர்ந்து கொண்டு ஜாலியாக பார்க்க விரும்பி வருகிறார்கள். எனவே ஓடிடியிலும் படங்கள் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
எனவே போட்டி போட்டுக் கொண்டு சில பிரபல ஓடிடி தலங்கள் படங்களை வாங்கி வருகிறது. அப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் நான்கு முதல் ஆறு படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் திரையரங்குகளில் ரிலீசான படங்கள் அனைத்தும் ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் ரிலீஸ்சாகி வருகின்றது.
அந்த வகையில் தற்பொழுது இந்த வாரம் மட்டும் எந்தெந்த ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனைய படைத்திருக்கும் ஷாருக்கானின் பதான் படம் மற்றும் மோகன் சி இயக்கத்தில் செல்வராகவன் நடித்து மிரட்டி இருக்கும் பகாசூரன் உள்ளிட்ட இந்த வாரம் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்டை தற்பொழுது பார்க்கலாம்.
அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள படங்கள்:
1. பதான்
2. பகாசூரன்
3. ஹண்ட்டர் (இந்தி வெப்தொடர்)
ஜீ5 ஓடிடியில் வெளியான படங்கள்:
1. செங்களம் (தமிழ் வெப்தொடர்)
2. Kanjood Makhichoos (ஹிந்தி திரைப்படம்)
3. A Man Called Otto (ஆங்கில திரைப்படம்)
4. பூவன் (மலையாள திரைப்படம்)
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான படங்கள்:
1. The Night Agent (ஆங்கில வெப்தொடர்)
2. Chor Nikal Ke Bhaga ( ஹிந்தி திரைப்படம்)
இவ்வாறு இந்த திரைப்படங்களை தொடர்ந்து ‘புருஷ பிரேதம்’ என்ற மலையாள திரைப்படம் சோனிலைவ் ஓடிடியிலும், Vinaro Bhagyamu Vishnukatha என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓட்டிடியிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.