செப்டம்பர் மாதத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படங்களின் லிஸ்ட் .! இதில் உங்களுக்கு பிடித்த படம் எது.?

movies-released-in-theaters-in-september-2023
movies-released-in-theaters-in-september-2023

செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை.

கிக் : நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு பிறகு அடுத்த திரைப்படமாக கிக் திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியானது இந்த திரைப்படத்தை பிரசாந்த் ராஜ் தான் இயக்கியிருந்தார் மேலும் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்திருந்தார்.

லக்கி மேன்: காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு சமீப காலமாக ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்த வருகிறார். இந்த நிலையில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவான லக்கி மேன் திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்கிற்கு வந்தது இந்த திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பரம்பொருள் : அரவிந்தராஜ் எழுதி இயக்கியிருந்த பரம்பொருள் திரைப்படத்தில் அமிர்தாஸ், ஆர் சரத்குமார், காஷ்மீர் பர்தேஷி, ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்கிற்கு வந்தது.

கருமேகங்கள் கலைகின்றன: பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு ,மகானா சஞ்சீவி, சாரல், ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் கரு மேகங்கள் கலைகின்றன இந்த திரைப்படத்தை தங்கர் பச்சன் இயக்கியிருந்தார் படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனங்களை பெற்றது.

குஷி: சிவா நிர்வாண இயக்கத்தில் விஜய தேவர கொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் குஷி இந்த திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்கிற்கு வந்தது.

ஜவான்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ஜவான் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்கிற்கு வந்து ஆயிரம் கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி : நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகிக்கு பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை ஆனால் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாக்கிய திரைப்படம் தான்மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் இரு மொழிகளிலும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியானது.

மார்க் ஆண்டனி: விஷால் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் மார்க் ஆண்டனி இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனும் மூன்று மொழிகளில் வெளியானது.

ஆர் யூ ஓகே பேபி : இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் தான் ஆர் யூ ஓகே பேபி இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் செப்டம்பர் 22ஆம் தேதி வெளியானது.

சந்திரமுகி 2: பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத்,  லட்சுமிமேனன், ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சந்திரமுகி 2 இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்கில் வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இறைவன்: ஐ அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இறைவன் இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது மேலும் இந்த திரைப்படத்தில் 12 சிறுமிகளை கொன்ற ஒரு கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருந்தார் இந்த திரைப்படமும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.