தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளிவந்து வெற்றி தோல்வியை சந்தித்து வருகின்றன அந்த வகையில் சிறந்த கதைகளில் இருந்தும் அத்தகைய படங்கள் ரசிகர் மத்தியில் கொண்டாடப்பட்டாலும், அந்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் இடம் பிடிப்பதில்லை.ஆனால் அத்தகைய படங்கள் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்திருக்கும் இப்படிப்பட்ட திரைப்படங்களை தற்பொழுது காண உள்ளோம்.
1.அன்பே சிவம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அன்பே சிவம். இப்படத்தில் கமல்ஹாசன் சற்று வித்தியாசமாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இப்படத்தில் அவருடன் மாதவன், நாசர்,கிரண் போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் இப்படம் அதிக அளவில் வசூலில் அளிக்காவிட்டாலும் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் சிறந்த படமாக இன்றளவும் இருந்து வருகிறது.
2. ஆயிரத்தில் ஒருவன்.
இயக்குனர் செல்வராகவனின் மாறுபட்ட கதைகளில் மிகவும் குறிப்பிடக்கூடிய படங்களில் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வரலாறு கதைக்களத்துடன் எடுக்கப்பட்ட படமாக இருந்தது இப்படம் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் பிடிக்காமல் போனாலும், ஆனால் தற்பொழுது ரசிகர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளது.
3.ஹேராம்.
கமலஹாசன் தயாரித்து இயக்கிய படம் ஹேராம். இப்படத்தில் ஷாருக்கான் ஹேமமாலினி ராணி முகர்ஜி போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படம் வித்தியாசமான கதை களம் கொண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இப்படம் வெளிவந்து அதிக அளவில் வசூல் சாதனை பெறாவிட்டாலும் அதன் பிறகு அனைத்து தரப்பு மக்களாலும் பேசப்படும் படமாக தற்பொழுது வரை இருந்து வருகிற படம் ஹேராம்.
4.கற்றது தமிழ் .
ராம் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கற்றது தமிழ் படத்தில் வித்தியாசமாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஜீவா. இப்படத்தில் அறிமுக ஹீரோயினாக அஞ்சலி நடித்திருந்தார். இப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சமூக அக்கறையை வெளிப்படுத்தும் படமாக இப்படம் இருந்தது ஆனால் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தற்போது மக்களுக்கு பிடித்த படமாக வந்துள்ளது.
5.ஆளவந்தான்.
சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆளவந்தான் திரைப்படத்தில் கமலஹாசன் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் தற்போது ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளது.
6.இறைவி
இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இறைவி இப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர் இப்படம் ரசிகர்கள் மிகவும் பிடித்த படமாக அமைந்துள்ளது.
மயக்கம் என்ன, ஆரண்ய காண்டம், புதுப்பேட்டை, இருவர் போன்ற படங்கள் தற்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளது.