டிசம்பர் 30-ல் ஒரே நாளில் வெளியாகும் 4 முன்னணி நடிகைகளின் திரைப்படங்கள்…

movies
movies

இந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி கிட்டத்தட்ட 10 திரைப்படங்களுக்கு மேல் வெளியாக காத்திருக்கிறதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் ராங்கி, ஓ மை கோல்ட், செம்பி, அருவா சண்டை, டிரைவர் ஜமுனா, உள்ளிட்ட பல திரைப்படங்கள் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பட்டியலில் கடைசி சில நேரங்களில் ஒரு சில படங்கள் வந்து சேரலாம் என்றும் ஒரு சில படங்கள் விலகலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் திரைப்படங்களில் நான்கு முன்னணி நடிகைகளின் படங்களும் சேர்ந்து வெளியாகிறது. அவர்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் :- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பல திரைப்படங்களில் நடித்த தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் நடிப்பில் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா.

திரிஷா:- 90 காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமல்லாமல் இவருடைய குந்தவை கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இவர் நடிப்பில் டிசம்பர் 30ம் தேதி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ராங்கி.

சன்னி லியோன் :- கோலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சன்னி லியோன் இவர் பல இளைஞர்களின் கனவு கனியாகவும் திகழ்ந்து வருகிறார்கள் மேலும் இவர் தமிழில் ஓ மை கோல்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்றன் டிசம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

கோவை சரளா:- 80 மற்றும் 90களில் நகைச்சுவை நடிகையாக வளம் வந்த நடிகை கோவை சரளா பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் நடிகை கோவை சரளா மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நடித்த படம் ஏராளம் என்று சொல்லலாம் இந்த நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆம் இவர் நடிப்பில் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் செம்பி.