சினிமா துறையில் பல இயக்குனர்கள் உள்ளனர். இருப்பினும் ஒரு சில நடிகர்களும் தன்னுடைய படங்களை இயக்கி நடித்து உள்ளனர். அந்த வகையில் நமக்கு குணச்சித்திர வேடங்களில் நடித்து பலரது மனதில் இடம் பிடித்தவர் ஜிஎம். குமார். இவர் இயக்கிய திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 1986 ஆம் ஆண்டு பிரபு மற்றும் பல்லவி,வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அறுவடை நாள்.இந்த படத்தை தயாரிப்பாளர் சாந்தி நாராயணசாமி மற்றும் டி.மனோகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
1989ஆம் ஆண்டு சத்யராஜ் மற்றும் ராதா சில்க் ஸ்மிதா நடிப்பில் வெளிவந்த பிக்பாக்கெட் இந்தத் திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.இந்த படத்தை தயாரிப்பாளர் கே பாலு அவர்கள் இயக்கியுள்ளார்.
1991ஆம் ஆண்டு பிரபு, கார்த்திக், பல்லவி நடிப்பில் வெளிவந்த இரும்பு பூக்கள் இந்த படமும் இவருக்கு ஒரு சுமாரான படமாக அமைந்தது. இந்த படத்தை ஆர்.புஷ்பா அவர்கள் தயாரித்துள்ளனர்.
1991 ஆம் ஆண்டு மோகன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான உருவம். இந்த படமும் இவருக்கு ஓரளவுதான் வெற்றியை தேடி தந்தது.இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் டி பி.சிங் தருண் ஜாலன் இவர்கள் தயாரித்துள்ளனர்.