உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகிலும் சரி நிஜ வாழ்விலும் சரி தொட்ட எல்லாத்தையும் வெற்றியைக் கண்டுள்ளார் அதற்காக கடினமாக உழைக்கக் கூடிய ஒரு மனிதர். கமலஹாசன் முதலில் சினிமா உலகில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் அரசியல், சினிமா உலகில் படங்கள் தயாரிப்பு நிறுவனம், கதர் ஆடை நிறுவனம், சின்னத்திரை பிக் பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்த விஷயங்களை செய்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
இதன் இடையில் இப்பொழுது விக்ரம் படத்திலும் அவர் நடித்துள்ளார் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கை கோர்த்து விக்ரம் என்னும் படத்தில் நடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக இருந்தாலும் அற்புதமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் கமலுடன் கை கொடுத்து மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி போன்ற மக்கள் மத்தியில் பிரபலமடைந்த வரும் இந்த படத்தில் நடிப்பது இந்த படத்திற்கான பிளஸ்ஸாக அமைந்துள்ளது.
விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் எது என்பது குறித்து தற்போது பார்ப்போம் கமலஹாசன்.
நடிப்பில் 80-களில் வெளியாகிய திரைப்படங்கள் அனைத்துமே 100 நாட்களை எல்லாம் அசால்டாக தொட்டுவிடும் ஆனால் கமலின் சினிமா பயணத்தில் 500 நாட்கள் தொட்ட முதல் திரைப்படம் மரோசரித்ரா அந்த படத்தில் கமல் நடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.