ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நடத்தப்படுகின்றன இதுவரை 14 ஐபிஎல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது. சமிபத்தில் நடந்த ஐபிஎல் போட்டி மட்டும் முதல் பாதி இரண்டாம் பாதியாக நடந்தது முதல் பாதி இந்தியாவிலும் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.
எப்படியோ ஒரு வழியாக அனைத்து போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தியது பிசிசிஐ இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறந்த ஆட்டத்தை ஆரம்பத்திலிருந்து கடைசி வெளிப்படுத்தி வந்தது கடைசி போட்டியிலும் தனது சிறப்பான செயல்பாட்டால் வெற்றியை ருசித்தது சென்னை அணி இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்த ஐபிஎல் சீசன் வருகின்ற 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மார்ச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இந்த தடவை 8 அணிகள் கிடையாது 10 அணிகள் விளையாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 8 அணிகள் விளையாடினாலே 50 நாட்களுக்கும் மேலாக போட்டி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரண்டு அணிகள் புதிதாக இணைவதால் ஐபிஎல் நாட்கள் அதிகரிப்பதால் தொலைகாட்சி மற்றும் பிசிசிஐக்கு நல்ல வருமானம் என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர். 2022 ஆம் ஆண்டு இரண்டு அணிகள் புதிதாக களம் இறங்குகின்றன இந்த ஏலத்தில் பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங் தீபிகா படுகோன் ஆகியோர் கலந்துள்ளனர்.
ஏற்கனவே ஷாருக்கான் கொல்கத்தா அணியும், பிரீத்தி ஜிந்தா பஞ்சாப் பணியையும் கைப்பற்றிய நிலையில் தற்போது இவர்கள் ஒரு அணியை தட்டி தூங்க ரெடியாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது 2022ஆம் ஆண்டு இவர்கள் எந்த எந்த அணிக்கு ஓனர் ஆவார்கள் என்பதையே பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.