தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு பல திரைப்படங்கள் வெளியாகிறது ஆனால் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறுகின்றது என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும் நல்ல விளம்பரம் செய்யப்படும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யப்பட்டு பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
அந்த வகையில் திரைப் படத்தின் தயாரிப்பாளர்கள் ரசிகர்களை கவர்வதற்காக சில ஆச்சரியமான விஷயத்தை செய்து வருகிறார்கள் அந்தவகையில் புரமோஷன் என்ற பெயரில் விளம்பர உத்திகளை பயன்படுத்தி வெளியாகி ஐந்து திரைப் படங்களை இங்கே காணலாம்.
திருப்பாச்சி – தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சமீபகாலமாக பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறார் அதுமட்டுமில்லாமல் விஜயின் திரைப்படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் ரசிகர்களிடம் பிரபலம் அடைய சில விஷயங்கள் தேவைப்பட்டது அந்தவகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய திருப்பாச்சி பட வெளியீட்டின்போது விஜயின் முகம் பதிக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்களை விற்று குழந்தைகளை வெகுவாக கவர்ந்தார்.
அந்நியன்-அப்போதைய காலகட்டத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அந்நியன் இந்த திரைப்படத்தை சங்கர் அவர்கள் இயக்கியிருந்தார் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர்பெற்ற சங்கர் அந்நியன் திரைப்படத்தில் பல புதுவிதமான விஷயங்களை வெளிக்காட்டினார் அந்தவகையில் இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அந்நியன் வகையான முகமூடியை கடைகளில் விற்பனை செய்தார்கள். இது விக்ரமை மேலும் பிரபலபடுத்தியது.
கபாலி- அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எப்பொழுது மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் அதுமட்டுமில்லாமல் ரஜினியின் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக விமானத்தில் வரையப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த திரைப்படத்தில் கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார்.
மெர்சல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைபடம் மெர்சல் இந்த திரைப்படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்காக சமூக வலைத்தளத்தில் ட்விட்டர் ஏமோஜியை ப்ரோமோஷன் செய்துவந்தார்கள் இது சமூக வலைதளத்தை கலக்கியது இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் சில திரைப்படங்களுக்கு இந்தத் திட்டம் பயன்படுத்தப்பட்டது.
விக்ரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் விக்ரம் திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவில் முதன்முறையாக NET களை அறிமுகப்படுத்தி உள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.